நயினாதீவில் விகாராதிபதிக்கு மக்கள் மலர்தூவி மரியாதை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு நாகதீப ராஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரரின் பொன் விழாக் கொண்டாட்டம் சர்வமதங்களின் பங்கேற்புடன் நேற்று(ஜூலை 5) புதன்கிழமை நயினாதீவு மணிமேகலை அரங்கத்தில் இடம்பெற்றது.

நயினாதீவு மண்ணில் 50 வருடங்களாக மக்களுக்கு ஆற்றிய சேவையை கௌரவிக்கும் வகையில் நயினாதீவு மக்களால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பௌத்த பீடங்களின் தேரர்கள்,நூற்றுக்கணக்கான பிக்குகள் மற்றும் நயினாதீவு நாகபூசணிஅம்மன் ஆலய பிரதம குரு உள்ளிட்ட சர்வமதத் தலைவர்களின் பங்கேற்புடன் நிகழ்வு இடம்பெற்றது.

வீதியில் இரு மருங்கிலும் மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூடி விகாரதிபதிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Share this Article