வவுனியா விடுதியில் கலாசாரச் சீரழிவுகள்!- பொலிஸாரால் நால்வர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வவுனியா, ஏ-9 வீதியில் மூன்று முறிப்பில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்றுத்(ஜூலை 5) திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 20 வயது இளம்பெண் உட்பட நால்வர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த விருந்தினர் விடுதியில் சமூகப்பிறழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே திடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த விடுதியில் தங்கியிருந்த 20, 34 வயதுடைய இரு பெண்களும், போதைப்பொருள் பாவித்தமை மற்றும் சமூகப்பிறழ்வு நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரின் மருத்துவ அறிக்கைகள் பெறப்படவுள்ளன என்றும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, இந்த விருந்தினர் விடுதி முன்னாள் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் பின்னணியிலேயே இயங்குகின்றது அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Share this Article