எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவர்களுக்கான தலைமைத்துவ அபிவிருத்தி செயற்றிட்டமானது கடந்த 28 ஆம் திகதி புதன்கிழமை மாலை வித்தியாலய அதிபர் திரு.இ.கயூரன் அவர்களின் தலைமையில் சிறப்புற இடம்பெற்றது.

இந்தப் பயிற்சியை வழங்குவதற்காக 20th battalian of NCC Adjutant cap.Alvinjens, Training officer Lt.Nilaxshan,Instructor of NCC ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி பயிற்றுவிப்பாளர்களுக்கும் மற்றும் இந்த நிகழ்வை நேர்த்தியான முறையில் ஒழுங்கமைத்த எழுவைதீவு முருகவேள் வித்தியாலய ஆசிரியரும் PO of NCC திரு.அ. கமிலஸ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மாணவர்களுக்கு பயன்மிக்கதொரு சிறந்த பயிற்சியாக இந்த நிகழ்வு அமைந்திருந்ததுடன் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article