முல்லைத்தீவில் மென்பந்து துடுப்பாட்டப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

“சமுதாய அடிப்படை அமைப்பு மற்றும் வங்கிக்கான சமூக அபிவிருத்தி சவால் கிண்ணம் – 2023” மென்பந்து துடுப்பாட்ட போட்டியின் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு இன்று (ஜூன் 26) முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த ஆரம்ப நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன்(காணி) பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் மென்பந்து போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் போட்டியின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளதோடு வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இந்த ஆரம்ப விளையாட்டு நிகழ்வில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு.மு.முபாரக், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு.க.லிங்கேஸ்வரகுமார், சமுர்த்தி முகைமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பிரதேச மட்ட அமைப்புக்களின் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article