காணி வாங்க சென்றவர் கட்டுத்துவக்கால் காயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பளை, இயக்கச்சிப் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்து ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த ஒருவரே காயமடைந்துள்ளார்.

இவர் காணி வாங்குவதற்காகத் தரகர் ஒருவருடன் காணி பார்க்கச் சென்றபோது, அங்கு கட்டப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்து காலில் காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share this Article