மன்னாரில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை – அதிர வைக்கும் சம்பவம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார், நானாட்டான் பிரதேச செயலர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (ஜூன் 17) காலை நடந்துள்ளது. இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த துஷியந்தன் விஜய் என்ற 25 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முருங்கன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article