எழுவைதீவு முருகன் ஆலய மேற்கு வீதி மதில் அமைக்க நிதி அன்பளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எழுவைதீவு முருகன் ஆலயத்தின் மேற்கு வீதி மதில் அமைப்பதற்காக எழுவைதீவு சைவபரிபாலன சபையினரின் வேண்டுகோளிற்கமைய அப்பணியை நிறைவுசெய்ய கனடா வாழ் காசிலிங்கம் சத்தியகலா என்பவர் 9 இலட்சத்து 60 ஆயிரம் பெருந்தொகையை திருப்பணிக்காக வழங்கியுள்ளார்.

நல்லம்மா சிவராசதுரை, கந்தையா யோகேஸ்வரன் ,உமாபதி இராஜேஸ்வரி ஆகியோரும் மதில் அமைப்பதற்கான மேலதிக நிதியை வழங்கியுள்ளனர்.

முருகன் கோவிலின் மேற்கு பக்கவேலி நீண்டகாலமாக புனரமைக்கப்படாது இருந்தமையால் ஆலயத்தின் பூஞ்செடிகள் யாவும் மாடுகளால் அழிக்கப்பட்டு வந்தது.

திருப்பணியின் பேருதவிக்கு எழுவைதீவு சைவபரிபானசபையினர் நன்றிகளை பகிர்ந்துள்ளனர்.

Share this Article