நயினாதீவில் கூரை பிரித்து பெருந்தொகை நகைகள் கொள்ளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவில் வீட்டுக் கூரையைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் சுமார் 22 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று(ஜூன் 13) இரவு நடந்துள்ளது. வீட்டிலிருந்த இரு பெண்களும் உறக்கத்தில் இருந்தபோது வீட்டில் கொள்ளை நடந்துள்ளது.

இன்று காலை வீட்டின் அறையில் இருந்த கைப்பையும், அதற்குள்ளிருந்த நகைகளும் காணாமல் போயிருந்ததை அடுத்து வீட்டில் கொள்ளையிடப்பட்டமை தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஊர்காவற்றுப் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.

Share this Article