மாடு திருடச் சென்று மாட்டியோரை துவைத்தெடுத்த கிராம மக்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மாடுகளைத் திருட முயன்ற குற்றச்சாட்டில் வவுனியா, சமயபுரம் கிராமத்தில் இருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று(ஜூன் 12) காலை 6 மணியளவில் நடந்துள்ளது.

சமயபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கால்நடைகள் திருடு போகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நேற்றுமுன்தினம் இருவர் மாடுகளைத் திருடிய குற்றச்சாட்டில் பொதுமக்களால் இருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

சந்தேகநபர்களை நெளுக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்க மறுத்த பொதுமக்கள், இருவரையும் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Share this Article