வேலணை சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவ தினம் மற்றும் கழிவு முகாமைத்துவ தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட வேலணை சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (ஜூன் 5) இடம்பெற்றது.

வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து இந்த மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து வேலணைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் பி.ப.3.00 மணிக்கு ஆரம்பமாகி ஐந்து அணிகளாக பிரிந்து அலுவலக முன்றலில் இருந்து பிளாஸ்டிக், பொலித்தீன்களை அகற்றும் சிரமதான பணியும் பெரியளவில் வேலணைப் பிரதேசத்தை அண்டியுள்ள வீதியோரங்களில் மேற்கொள்ளப்பட்டது.

Share this Article