புங்குடுதீவு வைத்தியசாலையில் ஜூன் 3ஆம் திகதி சிரமதானம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தால் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை 7. 30 மணியிலிருந்து சிரமதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அண்மையில் வைத்தியசாலையில் நடைபெற்ற நோயாளர் நலன்புரி சங்கத்தின் விசேட கலந்துரையாடலில் வைத்தியசாலையின் உள்ளார்ந்த சுற்றுப்புறங்களில் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய துப்பரவு பணிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது .

அதற்கமைய புங்குடுதீவு வாழ் பொதுமக்களின் ஆதரவுடன் எதிர்வரும் ஜூன் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் சிரமதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும், அதற்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.

Share this Article