கிளி பீப்பிள் அமைப்பின் ஏற்பாட்டில் தாயகத்தில் அடையாள மரதன் ஓட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

லண்டன் எடின்பரோ நகரில் நடைபெறும் மரதன் ஓட்ட போட்டியில் அங்கீகரிக்கப்பட்ட வலிந்துதவும் சமூக சேவை அமைப்பான கிளி பீப்பிள் அமைப்பின் சார்பாக மரதன் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் மரதன் நிகழ்விற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் தாயகத்தில் அடையாள மரதன் நிகழ்வு ஒன்றை இன்று(மே 27) கிளி பீப்பிள் அமைப்பின் கிளிநொச்சி கிளை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த மரதன் நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட செயலர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் அவர்கள் ஆரம்பித்து வைத்து நிகழ்வை சிறப்பித்திருந்தார்.

500 இற்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கு பெற்றியிருந்த இம்மரதன் நிகழ்வு பரந்தன் சந்தியில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி டிப்போசந்தி பசுமை பூங்காவில் நிறைவுபெற்றது.

தாயகத்தில் போதைவஸ்து பாவனைக்கு எதிரான நிகழ்ச்சித் திட்டத்திற்காகவும், கிளிநொச்சி அக்கராயன்குள சூரியசக்தி ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்திற்காகவும் நிதி சேகரிக்குமுகமாக கிளி பீப்பிள் அமைப்பு இம்முறை இந்த எடின்பரோ மரதன் நிகழ்வில் பங்குகொள்கின்றது.

Share this Article