கிண்ணம் வென்றது நயினாதீவு மத்திய விளையாட்டுக்கழகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு பிடாரி அம்மன் வேள்வி உற்சவத்தை முன்னிட்டு நடாத்திய 2023 ஆம் ஆண்டுக்கான மாபெரும் மென்பந்தாட்டத்தின் இறுதி போட்டியில் நயினாதீவு மத்திய விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

நயினாதீவு பிடாரி அம்மன் சனசமூக நிலையமும் பிடாரி அம்மன் விளையாட்டுக்கழகமும் இணைந்து இந்தப் போட்டியை நடாத்தியது.

இறுதி போட்டியில் நயினாதீவு மத்திய விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நயினாதீவு இஸ்லாமிய விளையாட்டுக் கழகம் மோதிக்கொண்டதில் நயினாதீவு மத்திய விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

Share this Article