மன்னாரில் காணாமல் போன மாணவியை புத்தளத்தில் கண்டுபிடித்த பொலிஸார்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார், பண்டாரவெளி, மணற்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவி நேற்று முன்தினம் (மே 18) முதல் காணாமல் போயிருந்த  நிலையில் புத்தளத்தில் நேற்று (மே 19) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது 15) என்ற மாணவியே காணாமல் போயுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மாணவி நேற்று(மே 19) மாலை புத்தளத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டு புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article