சக மாணவன் மீது தாக்குதல் நடத்தி ரிக்-ரொக்கில் காணொலி – மாணவர்கள் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மாணவன் ஒருவரைக் கொடூரமாகத் தாக்கி அதை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய மாணவர்கள் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, வைரவப்புளியங்குளம் வீதியில் மாணவன் ஒருவரை தலைக்கவசம், கொட்டன் ஆகியவற்றால் தாக்கும் வீடியோ பதிவு ரிக்-ரொக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான மாணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை மேற்கொண்ட பொலிஸார், இரு மாணவர்களைக் கைது செய்துள்ளனர்.

Share this Article