ஆதிலிங்கேஸ்வரருக்கு 108 கும்ப சங்காபிசேகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய 108 கும்ப சங்காபிசேகம் நேற்று (மே 10) நடைபெற்றது.

வவுனியாவில் உள்ள வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரமங்கள் கடந்த மார்ச் மாதம் இனந்தெரியாதோரால் இடித்து அழிக்கப்பட்டது.

இது தொடர்பாக வவுனியா மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந் நிலையில், நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக கடந்த மாதம் 28ஆம் திகதி விக்கிரகங்கள் மீண்டும் எழுந்தருளச் செய்யப்பட்டன. அதன்பின்னர் தொடர்ச்சியாக 12 நாள்கள் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

நேற்று 108 கும்ப சங்காபிஷேகம் நடைபெற்றது. வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் சங்காபிஷேகத்தில் கலந்துகொண்டனர்.

Share this Article