துணுக்காய் பிரதேச செயலகத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு உதவித்திட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் தெரிவு செய்யப்பட்ட பொது மக்களிற்கான உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்வு துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு.க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதியுதவியின் கீழ் பாய், நுளம்பு வலை மற்றும் சமையல் உபகரணங்கள் தெரிவு செய்யப்பட்ட பொது மக்களிற்கு வழங்கப்பட்டன.

தொடர்ந்து “கிராமத்துடனான கலந்துரையாடல்” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னியன்குளம் மற்றும் அம்பலப்பெருமாள் குளம் ஆகிய இரு கிராம அலுவலகர்கள் பிரிவிலுள்ள மீனவர் சங்கத்தின் கீழ் தொழில்புரியும் பயனாளிகளிற்கு படகு, வலை மற்றும் ஈயம் முதலிய மீன் பிடி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம்), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ம.கி.வில்வராஜா, பிரதேச செயக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article