பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக கிளிநொச்சியில் இன்று (ஏப்ரல் 29) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை புதிய பேருந்து நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசினால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டு நிறைவேற்றப்படுமாக இருந்தால் அது ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக மாறிவிடும் எனத் தெரிவித்தே ஆர்ப்பாட்டம் மேற்க்கொள்ளப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Share this Article