ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மாடுகளுக்கு காது அடையாளமிடும் நடவடிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் உள்ள மாடுகளுக்கு 2023ஆம் ஆண்டுக்கான காது அடையாளம் இடும் நடவடிக்கைகள் ஊர்காவற்றுறை கால்நடை மருத்துவ அலுவலகத்தால் கிராம அலுவலர் பிரிவு ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த நடவடிக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் ஜீலை மாதம் 12 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

  • ஏப்ரல் 19 – அனலைதீவு ஜே-37, 38
  • ஏப்ரல் 26 – எழுவைதீவு ஜே-39
  • மே 17 – ஊர்காவற்றுறை ஜே-49, பருத்தியடைப்பு ஜே-50
  • மே 24 – கரம்பொன் ஜே-51, கரம்பொன் கிழக்கு ஜே-52
  • ஜூன் 07 – கரம்பொன் தென்கிழக்கு ஜே-53, கரம்பொன் மேற்கு ஜே-54
  • ஜூன் 14 – நாரந்தனை வடக்கு ஜே-55
  • ஜூன் 21 – நாரந்தனை தென்மேற்கு ஜே-56, நாரந்தனை ஜே-57
  • ஜூன் 28 – நாரந்தனை தெற்கு ஜே-58
  • ஜூலை 05 – சுருவில் ஜே-59
  • ஜூலை 12 – புளியங்கூடல் ஜே-60

அறிவிக்கப்பட்ட தினத்தில் மட்டுமே அந்தந்தப் பிரதேசங்களில் காது அடையாளம் இடப்படும். மேலதிக தினங்கள் ஒதுக்கப்படாது என கால்நடை மருத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Share this Article