கொழும்பு போக்குவரத்து பஸ் வசதி துணுக்காய் மக்களுக்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

துணுக்காய், பாண்டியகுள பிரதேச மக்களின் கொழும்பு போக்குவரத்துக்கான பேரூந்து வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துணுக்காய் பிரதேச செயலகம் அறிவத்துள்ளது.

கிளிநொச்சி போக்குவரத்து சாலையினால் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் இரவு 07.00 மணிக்கு கொழும்புக்கான பயண பேரூந்து ஆரம்பிக்கப்பட்டு சாவகச்சேரி, பூநகரி, முழங்காவில், வெள்ளாங்குளம் ஊடாக துணுக்காய், மல்லாவிக்கு வருகை தந்து மாங்குளம் ஊடாக கொழும்பு வழித்தடத்தில் குறித்த பேரூந்து பயணிக்கின்றது.

துணுக்காய் – மல்லாவி தரிப்பிடங்கள் : 08.15 PM – 08.30PM

பேரூந்து இல :
NP – 9767
NP – 9943

பதிவு செய்வதற்கு அல்லது மேலதிக தகவலுக்கு :
0771058170
0771058171
0212283637

குறிப்பு : குறித்த பேரூந்து கொழும்பிலிருந்து இரவு 07.00மணிக்கு மீண்டும் மேற்குறித்த வழித்தடத்தில் பயணிக்கும்.

மல்லாவி, துணுக்காய் தரிப்பிடங்கள் : அதிகாலை 02.00AM – 02.30AM

Share this Article