புதுவருடத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் விற்பனைக் கண்காட்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்று (ஏப்ரல் 10) முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலகங்களின் ஒழுங்கமைப்பில் விற்பனைக் கண்காட்சி நடைபெற்றது.

சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு இந்த விற்பனைக் கண்காட்சி நடைபெற்றது.

ஒட்டுசுட்டான் பிரதேச சமுர்த்தி அபிமாணீ விற்பனைக் கண்காட்சியானது ஒட்டுசுட்டான் சமுர்த்தி அலுவலக வளாகத்தின் அருகாமையில் பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் கலந்து சிறப்பித்ததுடன் விற்பனைக் கண்காட்சியை திறந்து வைத்தார்.

உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கிலும், உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலும், அவற்றை விளம்பரப்படுத்தும் நோக்கிலும் இந்த விற்பனைக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு. முபாரக் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். அத்தோடு ஒட்டுசுட்டான் உதவிப் பிரதேச செயலாளர், சமுர்த்தி முகாமையாளர் , ஏனை உத்தியோகத்தர்கள், விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article