கொலையில் முடிந்த குடும்பச் சண்டை!- மன்னாரில் நடந்த சோக சம்பவம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மன்னார் சாந்திபுரம் பகுதியில் நேற்று (ஏப்ரல் 9) இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சிலர் இணைந்து கொடூரமாகத் தாக்கியதில் எமில் நகர்ப் பகுதியைச் சேர்ந்த 34 வயதான சத்தியா என்ற நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாந்திபுரம் பகுதியில் இரு குடும்பத்திற்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்சினை பொலிஸ் வரை சென்று சமாதானப்படுத்தப்பட்டிருந்தது.

நேற்று இரவு குறித்த இரு குடும்பத்திற்கும் இடையில் மீண்டும் பிரச்சினை இடம்பெற்ற நிலையில் முரண்பாடு முற்றியுள்ளது.

இந்த தாக்குதலின் போது காயமடைந்த பெண் ஒருவர் உட்பட ஐவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொலை தொடர்பில் சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article