மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறுத்  திருப்பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உயிர்த்த ஞாயிறுத்  திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று இரவு (ஏப்ரல் 8) 11.15 மணிக்கு இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கல் இணைந்து திருவிழா திருப்பலியைக் கூட்டுத்திருப்லியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

திருவிழா திருப்பலி இடம்பெற்ற போது ஆலயத்தை சூழ இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது.

மன்னார் மறை மாவட்டத்திலுள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம்பெற்றதோடு, தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இன்று (ஏப்ரல் 9) காலையும் திருவிழா திருப்பலி ஆலயங்களில் ஒப்புக்கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share this Article