முல்லை அரச திணைக்களங்களுக்கு இடையிலான அரச அதிபர் வெற்றிக்கிண்ணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள அரச திணைக்களங்களுக்கு இடையிலான அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் 2022 ஆம் ஆண்டுக்கான இறுதிப் போட்டி நேற்று (மார்ச் 21) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்டச் செயலர் க.விமலநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் வரவேற்பு நடனத்துடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.

இறுதி போட்டி விளையாட்டு நிகழ்வில் பெண்களுக்கான மென்பந்து துடுப்பாட்டம், கயிறு இழுத்தல், ஆண்களுக்கான உதைபந்தாட்டம், கயிறு இழுத்தல் என்பன இடம்பெற்றன.

அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற அனைவருக்கும் கிண்ணங்கள், கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Share this Article