பாம்பு தீண்டியதில் இளைஞன் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பாம்பு தீண்டியதில் இளைஞன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் (மார்ச் 17) பூநகரி 4 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

23 வயதுடைய பாலச்சந்திரன் இசைமாறன் என்ற இளைஞனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இளைஞன் வழமை போன்று தூங்குவதற்கு சென்றுள்ளார். விடிந்து வெகு நேரமாகியும் எழும்பாததால் தயார் எழுப்ப சென்றுள்ளார். இளைஞர் வாயில் நுரை தள்ளியபடி மூச்சின்றி அசைவற்று கிடந்துள்ளார்.

இதனையடுத்து இளைஞனை உறவினர்கள் உதவியுடன் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இளைஞனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இளைஞன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

உடற்கூற்று பரிசோதனையை மேற்கொண்ட மருத்துவர்கள் பாம்பு தீண்டியதால் ஏற்பட்ட விசம்உடலினுள் பரவியதால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவித்தனர்.

 

 

Share this Article