முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வுகள்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலக்தில் மகளீர் தின நிகழ்வுகள் இன்று (மார்ச் 10) நடைபெற்றன.

காலை 9.30 மணிக்கு பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் கிராமிய நிர்வாக கிளையின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் நடைபெற்றன. முல்லைத்தீவு மாவட்டச் செயலர் க.விமலநாதன் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

“பொது அமைப்புக்களில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதநூடாக பெண்களை வலுவூட்டுதலும் அதன் மூலமாக சமூக அபிவிருத்தியும்” என்னும் தொனிப்பொருளில் இந்த மகளீர் தின நிகழ்வு நடைபெற்றது.

சர்வதேச மட்டத்தில் ஓட்டப்போட்டியில் 71 வயதிலும் சாதனை புரிந்துவரும் முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனை எஸ்.அகிலாண்டநாயகி நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வில் மேலதிக மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன்(நிர்வாகம்) , பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் கே.லிங்கேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ம.கி.வில்வராஜா, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி லிசோ கேகிதா, உலக உணவுத் திட்டத்தின் மாவட்ட அலுவலகர் திருமதி ஜெயபவாணி, மாவட்ட பதிவாளர், மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கும் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச சபைகளின் பெண் உறுப்பினர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article