பொலிஸாரின் திடீர் சோதனையில் சிக்கிகொண்ட 6 பேர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட் சுண்டிக்குளம் மற்றும் கல்மடு ஆகிய இடங்களில் இருந்து இருவேறு குற்றச்சாட்டுக்களில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிப்பர் வாகனம் ஒன்றும், உழவியந்திரம் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றுமு், அவர்களிடம் இருந்து 5 கிராம் 50 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article