சிறிதரனுடன் கலந்துரையாடிய மீனவர் சங்கப் பிரதிநிதிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடக்கு மாகாணத்தின் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் (பெப்ரவரி 28) நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

சமகாலத்தில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் மீனவர் சங்கப் பிரநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகளின் அதிகரிப்பு, எல்லைதாண்டிய மற்றும் சட்டவிரோத மீன்பிடியால் கடற்றொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் எதிர்கொள்ளும் வாழ்வாதார இடர்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெறுவதற்கு தன்னாலான முயற்சிகளை முன்னெடுப்பேன் என்று அந்தச் சந்திப்பில் மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உறுதியளித்துள்ளார்.

Share this Article