மன்னாரில் ஒருதொகுதி கேரள கஞ்சா மீட்பு!- சந்தேகநபர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் பிரதான வீதியில் இன்று(பெப்ரவரி 27) காலை ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

41 கிலோ 620 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கருங்கண்டல் வண்ணாங்குளம் பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என்றும், விசாரணையின் பின்னர் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article