வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சம்பவம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கிளிநொச்சி, உருத்திரபுரத்தில் நடந்த வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு (பெப்ரவரி 12) நடநதுள்ளது. மரண வீடு ஒன்றில் ஏற்பட்ட தர்க்கமே வாள்வெட்டில் முடிந்துள்ளது. 44 வயதான குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வாய்த்தர்க்கம் குழு மோதலாக மாறியதில் 15 பேர் கொண்ட குழு சரமாரியாக வாள்வெட்டில் ஈடுபட்டது என்று அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். இந்தத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும், மற்றொருவரும் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் நோயாளர் காவு வண்டி மூலம் மருத்துனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்வம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சந்கேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article