வயோதிப தம்பதியை கொடூரமாகத் தாக்கி நகை, பணம் கொள்ளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் வயோதிபத் தம்பதியைத் தாக்கி பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் நடந்துள்ளது.

வீட்டில் வயோதிபத் தம்பதி வசித்து வந்த நிலையில், வீட்டுக்குள் புகுந்தவர்கள் அவர்களைத் தாக்கி 5 பவுண் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான வயோதிபரான செல்லப்பா அழகையா காயங்களுடன் ஒட்டுசுட்டான் மருததுவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article