கிளிநொச்சி இளைஞன் கொலைச் சம்பவம் – சந்தேகநபர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி, விநாயகபுரத்தில் இளைஞர் ஒருவர் நேற்று (ஜனவரி 1) கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் இன்று (ஜனவரி 2) காலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், விசாரணையின் பின்னர் நாளை (ஜனவரி 3) நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி, விநாயகபுரத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

Share this Article