பயணிகள் பஸ்ஸில் கைவரிசை – பரந்தனில் சிக்கிய 3 பெண்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணத்தில் இருந்து மல்லாவி நோக்கிப் பயணித்த பயணிகள் பஸ்ஸில் திருட்டில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் பஸ் பயித்தபோது, பயணி ஒருவரின் கைப்பையில் இருந்த 50 ஆயிரம் ரூபா பணம், காப்பு ஒன்றும் திருடப்பட்டிருந்தது.

பஸ்ஸில் பயணித்த மூன்று பெண்களின் செயற்பாட்டில் சந்தேகமடைந்த நடத்துநர் அவர்களை விசாரிக்க முயன்றபோது, அவர்கள் பஸ்ஸில் இருந்து இறங்கித் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

ஆயினும் பஸ்ஸில் இருந்த பயணிகள் அந்தப் பெண்களை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் காப்பு மீட்கப்பட்டுள்ளது. மடக்கிப் பிடித்த பெண்கள் மூவரும் பரந்தன் சந்தியில் கடமையில் இருந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Share this Article