குறிகாட்டுவான் – யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் 776 வழித்தட தனியார் போரூந்துகள் நாளையதினம் (ஓகஸ்ட் 15) மட்டும் சேவையில் இருந்து விலகுவதாக சங்க நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

776 வழித்தட பேரூந்து உரிமையாளரான ஐயாத்துரை அற்புதராசா (அகிலன்) கடந்த ஓகஸ்ட் 10 அன்று தனது வீட்டில் இருந்த வேளை படுகொலை செய்யப்பட்டதனை கண்டித்தும் , படுகொலைக்கு நீதிவேண்டியும் கொலையிளிகளை விரைந்து கைது செய்யக்கோரியும் போக்குவரத்து சேவைகளை தாம் மேற்கொள்ளமாட்டோம் என புங்குடுதீவு தனியார் பேருந்துச்சேவைச் சங்கம் அறிவித்துள்ளது.