500-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு: சதொச அறிவிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மேலும் மூன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் 12 பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு மேலதிகமாக இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 425 கிராம் டின் மீன் ஒன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு, 490 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

பெரிய வெங்காயம் ஒரு கிலோ 22 ரூபாவால் குறைக்கப்பட்டு, 97 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

கோதுமை மா ஒரு கிலோ 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, 225 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இன்று (7 ஏப்ரல்) முதல் அமுலாகும் வகையில் இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர 500-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விசேட விலைக்கழிவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this Article