400 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

விற்பனை செய்வதற்காகப் போதை மாத்திரைகளை வைத்திருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (29/08) அநுராதபுரம், மாத்தளை சந்தை பகுதியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, விற்பனைக்காக வைத்திருந்த 400 போதை மாத்திரைகளுடன் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

Share this Article