பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகரும், சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் பணிப்பாளருமானிய திரு.வி.செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளை நிறுவன நிர்வாகத்தினால் யாழ் செட்டித்தெரு மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் நான்கில் கல்வி கற்கும் 40 மாணவர்களுக்கு கற்றல் செயலட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.
தற்போதை கொரோனா இடர்காலத்தில் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வது மிகவும் கடினமாக காணப்படுவதுடன் பல மாணவர்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். இந்த வகையில் மேற்படி செயற்றிட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
முப்பத்தையாயிரம் ருபா பெறுமதியில் 40 மாணவர்களுக்கு இச் செயற்றிட்டம் பூமணி அறக்கட்டளை நிறுவனத்தின் ஊடக இடம் பெற்றுள்ளது.
இந்நிகழ்வில்தலைவர்,லயன்,கலாநிதி நா.தனேந்திரன்,செயலாளர்,N.விந்தன் கனகரட்ணம்,உப செயலாளர்,வைத்தியர் இ.சற்குருநாதன்,பொருளாளர் T.யோசேப்,உப தலைவர், வைத்தியர் சௌந்தரராஜன் ஆகியோருடன்,பாடசாலை அதிபர் க.சசிகரன்,ஆசிரியர்களான செல்வி மு.நனிதபாமினி,திருமதி கா.சுதாகரன் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.