26 வயது பெண் கடத்தல் : கிளிநொச்சியில் சம்பவம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இரணைமடுச்சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் அடையாளம்தெரியாதவர்களினால் 26 வயது இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்றுபதிவாகியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாப்பிகைக் குளம் முன்பாக நேற்று(டிசம்பர்16) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் புண்ணாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதிஅழகுக்கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் நிலையில்கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்துள்ளார்.இந்த நிலையில் வழமை போன்று குறித்த யுவதி தங்கும் இடத்துக்குதிரும்புகையில் வேன் ஒன்றில் சென்ற குழுவினர் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றிசென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த யுவதியின் கைப்பை மற்றும் தொலைபேசி ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற தலைமைப் பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரம தலைமையிலான பொலிசார் விசாரணைகளைஆரம்பித்துள்ளனர்.

Share this Article