நெடுந்தீவு கிழக்குப் பகுதியில் நீர்இறைக்கும் இயந்திரம் திருட்டு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்குப் பகுதியில் கால்நடைகளுக்காக தன்னியக்க முறையில் குடிநீர் வழங்கும் வகையில் பொருத்தப்பட்ட நீர்இறைக்கும் இயந்திரம் களவாடப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கிழக்கு ஆலமாவனப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் வசித்து தற்போது புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் இராசரத்தினம் ரஞ்சன் அவரது தந்தையார் அமரர் சின்னத்தம்பி இராசரத்தினம் நினைவாக அந்த நீர் இறைக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டது.

அப் பகுதிகளில் உள்ள கால்நடைகளின் நன்மைகருதி தன்னியக்க முறையில் நீர்நிரப்பும் வகையில் அமைக்கப்பட்டு கால்நடைகள் தாகம் தீர்த்து வந்த நிலையில் தற்போது நீர் இறைக்கும் இயந்திரம் திருடப்பட்டுள்ளது.

சிலரின் இவ்வாறான செயற்பாடுகளால் ஊருக்கு உதவிவழங்கும் நல்லுள்ளங்கள் மனமுடைந்துள்ளனர்.

Share this Article