2020 லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 53 ஓட்டங்களால் வெற்றி பெற்று முதலாவது கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது.
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் சம்பியனாகியது.
ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற கோல் கிளாடியேட்டர்ஸுடனான இறுதிப் போட்டியில் வென்றே யாழ்ப்பாணம் சம்பியனாகியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்: 188/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷொய்ப் மலிக் 46 (35), திஸர பெரேரா ஆ.இ 39 (14), தனஞ்சய டி சில்வா 33 (200, அவிஷ்க பெர்ணான்டோ 27 (23), ஜோன்சன் சார்ள்ஸ் 26 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: தனஞ்சய லக்ஷன் 3/36 [4], சஹான் ஆராச்சிகே 1/36 [4], மொஹமட் ஆமிர் 1/36 [4], லக்ஷன் சந்தகான் 1/41 [4], நுவான் துஷார 0/39 [4])
காலி: 135/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பானுக ராஜபக்ஷ 40 (17), அஸாம் கான் 36 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷொய்ப் மலிக் 2/13 [3], உஸ்மான் ஷின்வஅரி 2/20 [2], வனிடு ஹஸரங்க 1/18 [4], சுரங்க லக்மால் 1/12 [3], தனஞ்சய டி சில்வா 1/31 [4], டுவன்னே ஒலிவியர் 1/25 [2], சத்துரங்க டி சில்வா 0/1 [1])