நெடுந்தீவு பயணிகள் படகான குமுதினி படகு செலுத்துனராக கடந்த 20 வருடங்களாக சேவையாற்றி இன்றுடன் பணி நிறைவு பெற்றுள்ள திரு. யாக்கோப்பு மரியஜெயசீலன் (வேவி) அவர்களின் சேவையினைப் பாராட்டி , ஓய்வுக காலம் சிறக்க எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
2004/05/21 ஆம் திகதி தொடக்கம் 2024/08/14 இன்று வரைக்கும் சுமார் 20 வருடங்களாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் சிறப்பான பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தனது சேவைக் காலத்தில் காரைநகர் – ஊர்காவற்றுறை இடையிலான கடற்பாதை, மற்றும் நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான குமுதினி படகு ஆகியவற்றில் அதனது சேவையினையாற்றி இன்றுடன் ஓய்வுபெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.