நெடுந்தீவில் கறோக்கி இசை நிகழ்ச்சி (ஆகஸ்ட்17) !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
Screenshot

நெடுந்தீவிலுள்ள பாடகர்களின் திறமைகளை கறோக்கி இசை நிகழ்ச்சி மூலம் வெளிக்கொணரும் நோக்கில் எதிர்வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட்17) நெடுந்தீவுதேவா கலாச்சார திறந்த வெளி அரங்கில் மாலை 06.00 மணியளவில் இசைநிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

இந் இசை நிகழ்ச்சியில் நெடுந்தீவின் பாடகர்களுக்கும்  சந்தர்ப்பம்வழங்கப்படவுள்ளதுடன் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயர் மற்றும்  பாடவுள்ள பாடலையும் முற்பதிவு செய்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளதுடன்,  ஒருவருக்கு ஒரு பாடல் மட்டும் அனுமக்கப்படவுள்ளது  

முதலில் பதிவு செய்த பாடகர் தேர்வு செய்த பாடலை இன்னொரு பாடகர்தெரிவு செய்ய முடியாது எனவும் வேறு பாடலை தேர்வு செய்யலாம் எனவும் விதிமுறை விடுக்கப்பட்டுள்ளது.

கறோக்கி இசை நிகழ்ச்சி நெடுந்தீவைச் சேர்ந்த தற்போது லண்டனில் வசித்துவரும் லோ.யோண்சனின் ஏற்பாட்டில்  இடம்பெறவுள்ளது.

பதிவுகளுக்கு – 0778448737 WhatsApp

Share this Article