இனத்தின் இருப்பைத் தக்கவைப்பதில் கலைஞர்களின் பணிகள்காத்திரமானவை – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு..!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இழந்துபோன தமது இறைமையை நிலைநாட்டி, இலங்கைத் தீவில் தமதுஇருப்பை மீள நிலைநிறுத்தப் போராடும் ஈழத்தமிழினத்தின் வரலாற்றில், கலைஞர்களின் பணிகள் மிகக் காத்திரமான இடத்தைப் பெறுகின்றன எனநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

எழுச்சிப் பாடல்களினது குரலாகவும், யாழ்ப்பாணத்தின் பெருமளவுஆலயங்களின் சிறப்பைப் பாடிய பக்தியின் குரலாகவும் தாயக இசைத்துறைவரலாற்றில் தனியிடம் பெற்றிருந்த, கரவைக்குமரன், செல்லத்துரை குமாரசாமிஅவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தலும் திருவுருவச்சிலை திறப்பும்அண்மையில் யாழ் – உடுப்பிட்டியில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்சிவஞானம் சிறீதரன், அன்னாரது திருவுருவச்சிலையை திரைநீக்கம் செய்ததுடன், ‘குமாரசாமி இசைத்தமிழ்க் கழகம்‘ என்னும் இசைக் கல்லூரியையும்சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்து உரையாற்றிய போதே மேற்கண்டவாறுதெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிதத்தாவது,

ஒரு சமூகத்தின் அக உணர்வுகளை,  அகப்புறச் சூழலின் தாக்கங்களை, யதார்த்தப் புறநிலைகளை, காலப்பிரவாகத்தை, வரலாற்றை, கடந்துவந்தபாதைகளை, அச்சமூகத்தின் உண்மை உணர்வுகளை பதிவு செய்வதிலும், அடுத்ததலைமுறைக்கு அவற்றின் அடிமுறை பிறழாது கடத்துவதிலும் கலை எனும்ஊடகமே முன்னணி வகிக்கிறது. அந்த அடிப்படையில், குமாரசாமி ஐயாவின்குரல் ஈழத்தமிழர்களின் மனங்களெங்கனும் நிறைந்தே இருக்கும் – என்றார்.

இந்நிகழ்வானது கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர்செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் அவர்களது தலைமையில்நடைபெற்றதுடன்ஙகலைஞர்கள், இசை ஆர்வலர்கள், அன்னாரது குடும்பத்தினர், கரவெட்டிப் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

Share this Article