17 வயது பாடசாலை மாணவன் கத்திக்குத்தில் பலி!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இரத்தினபுரி மாவட்டம், ஹெலியகொட – அராப்பொல – நெதுரன பகுதியில் இன்று (30/08) அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை சுமார் 12.20 மணியளவில் இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவன், நேற்று பகல் நேரத்தில் அராப்பொல பாடசாலைக்கு அருகில் தனது நண்பி ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, அதனை மற்றொரு இளைஞர் காணொளியாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாணவனுக்கும் குறித்த இளைஞருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இரவு நேரத்தில் மாணவனின் வீட்டிற்கு அருகில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது மாணவன் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் தற்போது பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை கைது செய்வதற்காக ஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article