நெடுந்தீவு பிரதேச செயலகப் பிாிவிற்குள் வசிக்கும் புரவிப்புயலால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு கியுமெடிக்கா நிறுவனத்தினால் இன்றைய தினம் (டிசம்பா் 22) நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் கேட்போா் கூடத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் வயோதிபா்கள் சிறுவா்கள் வாழ்கின்ற தேவையினை மதிப்பீடு செய்து அதற்கமைவாக தோ்வு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு இவ் நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளா் மதிப்பிற்குாிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவா்கள் கியுமெடிக்க நிறுவனத்தின் உத்தியோகத்தா்கள், கிராம சேவையாளா்கள் பிரதேச செயலக உத்தியோகத்தா்கள் இணைந்து தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு வழங்கி வைத்தாா்கள்
கியுமெடிக்கா நிறுவனத்தினா் நெடுந்தீவில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனா். குறிப்பாக கல்வி அபிவிருத்தி அவசரகால அம்புலன்ஸ் சேவை, கொவிட் 19 பாதுகாப்பு மற்றும் நிவாரணப்பணிகள் என பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.