ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட வர்த்தகருக்கு மரண தண்டனை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (17/09) பிற்பகல் உத்தரவிட்டது.

சிலாபம் பிராந்திய புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி சிலாபம், ஆனவிலுந்தாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட முற்றுகையின் போது இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

குறித்த முற்றுகையின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் அளவு 211 கிலோ 818 கிராம் என்பதுடன், பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையின்படி அதில் தூய ஹெரோயினின் அளவு 136 கிலோ 99 கிராம் என்பது உறுதி செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், இது 2017 ஆம் ஆண்டில் நாட்டில் நபர் ஒருவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாகும் என்பதுடன், இதன் பெறுமதி சுமார் 100 கோடி ரூபாயை நெருங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Share this Article
Leave a comment