ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் யாழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 04ம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் பிரான்சிஸ் அவர்கள் இன்று (ஜீலை 10) காலை நெடுந்தீவு கடற்தொழிலாளர்கள் சங்க சமாசத்தில் கலநதுரையாடல் நிகழ்வினை மேற்கொண்டார்
இந்நிகழ்வில் நெடுந்தீவில் பதிவு செய்யப்பட்ட கடற்தெழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் இதில் வேட்பாளர் அவர்கள் கடற்தொழில் மக்கள் சார்பாக தான் போட்டியிடுவதாகவும் தனக்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுத்ததுடன் தாங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த ஐந்து வருடங்களில் அனைத்து துறைகளிலும் விஷேடமாக கடற்தொழில் அபிவிருத்தியிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.