வைத்தியர் அரச்சுனாவை கைது செய்ய உத்தரவு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு மன்னார் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலைக்குள் புகுந்து குழப்பத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா மன்னார்பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். பின்னர், பிணையில்விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்றையதினம் (ஒக். 30) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது வைத்தியர் அர்ச்சுனா மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை. வைத்தியர்அர்ச்சுனாவுக்கு மனஅழுத்தம், தேர்தல் பரப்புரையில் தீவிரமாக உள்ளார் எனஅவரது சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்.

வைத்தியர் அர்ச்சுனா தேர்தல் பரப்புரையில் தீவிரமாக இருப்பதாகசொல்லப்பட்டாலும், அவரது புதிய  ஒலிப்பதிவுகள் என குறிப்பிட்டு, சமூகஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், வைத்தியர் அர்ச்சுனாவும் சமூகஊடகங்களில் பதிவிட்டு வருவதை சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர். நேற்று காலையில்  சமூக ஊடகத்தில் பதிவிட்டதையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதையடுத்து அர்ச்சுனாவை கைதுசெய்து முற்படுத்த மன்னார் நீதிமன்றம்உத்தரவிட்டது.

Share this Article