வேலணை வயல்வெளிகளை தீ மூட்டும் விசமிகள் – இன்றும் கைவரிசை!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும்  வயல்காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு இன்று (ஓகஸ்ட் 27) மாலையும் விசமிகள் தீமூட்டியதால் புற்கள் சுடர்விட்டு பற்றி எரிந்து வீதியால் மக்கள் செல்லமுடியாதநிலை உருவாகியுள்ளதுடன் கால்நடைகளும் பெரும் அசௌகரியங்களை  சந்தித்துள்ளன.

இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தியதை அடுத்து துரிதநடவடிக்கை மேற்கொண்டதன் பிரகாரம் யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த  நடவடிக்கைஎடுக்கப்பட்டது.

வீசும் கடும் காற்றுக் காரணமாக பெரும் சுடர்விடு எரிந்த தீயை  தீயணைப்புபடையினர் பலமணி நேரம் போராடிய பின்னரே கட்டுப்படுத்தினர்.

இதேநேரம் அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை பகுதியில் இருந்து அராலிச் சந்தி வரைதான பல கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வயல் வெளிகளில் உள்ள புற்களுக்கு வருட வருடம் விசமிகள் தீமூட்டி வருவதும் அதை அணைப்பதும் தொடர்கதையாகி இருக்கின்ற நிலையில் குறித்த சட்டவிரோதசெயலைச் செய்யும் விசமிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ கட்டுப்படுத்தவோமுடியாது பிரதேசத்தின் அதிகாரிகள் திணறிவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article