வேலணை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தனபாலசிங்கம்அகிலன் இன்றைய தினம் (ஓகஸ்ட் 27) காலை யாழ் அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன் முன்னிலையில் கடமையேற்றார்.

இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன் மற்றும் நிர்வாகஉத்தியோகத்தர் ஆ.சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தார்கள்.

மேலும் இன்றைய தினமே வேலணை பிரதேச செயலகத்தில் தமதுகடமையினை பொறுப்பேற்றுள்ளதுடன் ஊழியர்களால் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.